சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தைசிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.
இது தொடர்பாக நடிகர் ரஜினியோ அல்லது படக்குழுவினர் தரப்பில் இருந்தோ இச்செயல் செய்தவர்களை கண்டிக்கவில்லை. இதனாலயே அதனைசுட்டிக்காட்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ரசிகர்களை தடுக்க வலியுறுத்தி அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணாத்த படத்தின் முதல் பார்வைபோஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.