தடுமாற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படம்

சிறுத்தைசிவா இயக்கத்தில் தயாராகும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்றும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன இதனை சம்பந்தபட்டவர்கள் வழக்கம்போல உறுதிசெய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை

தமிழ் சினிமாவில் முதலீட்டு தடுமாற்றம் இல்லாத தயாரிப்புநிறுவனங்களில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் முதன்மையான நிறுவனமாக இருந்து வருகிறது சர்வதேச அளவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துவரும் இந்த நிறுவனத்திற்கு சினிமாவை லாபகரமான தொழிலாக கையாள முடியவில்லை
ரஜினிகாந்த்-தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் தயாரிக்கவுள்ளபடத்தின் மொத்தச் செலவுத் தொகையைக் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரஜினிகாந் படத்தின் வியாபாரம் மூலம் கிடைக்கும் வருவாய் செலவு தொகையை காட்டிலும் குறைவாக உள்ளது அதற்கேற்ப தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள ரஜினிகாந்த் விரும்பவில்லை இதனால் கௌரவத்திற்கு கவரிங் நகை போடஏஜிஎஸ் நிறுவனம் விரும்பவில்லை ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிப்பதன் மூலம் கிடைக்கும் கெளரவத்தை காட்டிலும் லாபகரமாக தொழில் செய்வதில் இருந்து சமரசம் செய்து நஷ்டப்பட முடியாது என கூறி ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனது வழக்கமான சம்பளத்தை குறைக்காமல் தன்னை வைத்து படம் தயாரிப்பவர்களுடன் இணையரஜினிகாந்த் விரும்புகிறார் எனவே மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே நடிக்கவிருக்கிறார் என்று ரஜினிகாந்த் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

சன் பிக்சர்ஸ் உடன் இணக்கமாக இருக்கும் பாண்டிராஜ் அவர்களது தயாரிப்பில்இப்போது சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது நகரம், கிராமிய கதைகளை குறைந்தபட்ஜெட்டில் படம் எடுக்ககூடியவர் பாண்டிராஜ் அவருக்கான சம்பளம், படப்பிடிப்பு செலவுகளை குறைப்பதன் மூலம் ராஜினிகாந்த் கேட்கும் கூடுதல் சம்பளத்தால் ஏற்படும் இழப்பை சரி செய்துவிட முடியும் என்பதால் ரஜினிகாந்த் – பாண்டிராஜ் கூட்டணியில் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது