பேய் படத்தில் ரம்யா நம்பீசன்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தின் மூலம் அறிமுகமான ரியோராஜ், அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்-நடிகைகளும் இணைகிறார்கள்.

இவர்களுடன்எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ‘ஆடுகளம்’ நரேன்  ஆகியோரும் படத்தில் இணைகிறார்கள். அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக-நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகிறது.ராஜேஷ்குமார், பத்மா, எல்.சிந்தன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். பத்ரி வெங்கடேஷ் டைரக்டு செய்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக முழுமையான நகைச்சுவை படத்துக்கு அவர் இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.