இந்த நிலையில் திடிரென சிவக்குமார் அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார். அவர் திருமணமாகாதவர் என்பதால் தனி நபராக அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். ஆகவே அவர் இறந்தது இரண்டு நாட்களுக்கு பின்புதான் மற்றவர்களுக்கே தெரியவந்தது. அதன்பின் அந்த பத்திரங்களை எங்கு வைத்தார் என்று தெரியவில்லை, எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவருக்கு தெரிந்த நபர்களிடம் விசாரித்தும் இன்றுவரை கிடைக்கவில்லை.
ஏனெனில் 2020 ஜனவரியில் அவர் தயாரித்து இயக்கும் துப்பறிவாளன்-2 திரைப்படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையின் மீது என்னிடம் பைனான்ஸ் வாங்கியுள்ளார் இந்த பைனான்ஸ் வாங்கிய தேதியில் இருந்து இன்றுவரை வட்டியும் அசலும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இரும்புத்திரை படத்தின் உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான் மோசடி செய்ய முயற்சிப்பதாக விஷால் புகார் செய்துள்ளார் என்ற செய்திகள் ஊடகங்களில் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றன,
பகிர்ந்துகொள்கிறேன்மேலும் மறைந்த இயக்குநர் சிவகுமார் அவர்களிடம் இருந்த உறுதிமொழி பாத்திரங்கள் அவரைச் சார்ந்த நபர்கள் இடமோ அல்லது வேறு யாரிடமும் இருந்தால் அதை என்னிடமோ, விஷாலிடமோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்கவும். மீறி அதை வைத்து இருப்பவர்களோ அல்லது பயன்படுத்த முயற்சி செய்வதோ தெரியவந்தால் அவர்கள் மீது மிக கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆர்பி செளத்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்