விடாமுயற்சி படத்தை கைவிடுகிறதா லைகா?

அஜித் குமார் நடிப்பில் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தில் இருந்து லைகா நிறுவனம் விலக உள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது அந்த தகவல்செய்தியாகவே வர தொடங்கிவிட்டது.லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பதாகவும்( ஏகே 62)இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் 2022 மார்ச் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பை விக்னேஷ் சிவன் கடந்த ஜனவரி மாதம் தொடங்க இருந்த நேரத்தில் அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம்.
விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவருக்கு பதில் அடுத்த மாதமே மகிழ் திருமேனியை ஒப்பந்தம்செய்தனர். இதையடுத்து படத்திற்கான திரைக்கதை வசனத்தை எழுதும்  பணிகளையும் உடனே தொடங்கினார் மகிழ்திருமேனி
கடந்த மே மாதம் 1-ந் தேதி நடிகர் அஜித் குமார் பிறந்தநாளன்று மகிழ் திருமேனி இப்படத்தில் கமிட் ஆனதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம் இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிட்டு உள்ளதாகவும் அறிவித்தனர்.மே மாதம் வந்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின் விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு தகவலும்வெளிவரவில்லை. கடந்த மூன்று மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு இப்போ ஆரம்பமாகிவிடும், அப்போ ஆரம்பமாகிவிடும் என தகவல் கசிந்தாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அஜித்குமார் ரசிகர்கள், செல்லும் இடமெல்லாம் விடாமுயற்சி படத்தின் தகவலை கேட்டு வருகின்றனர். அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 போட்டியில் கூட அஜித்குமார் ரசிகர் ஒருவர் விடாமுயற்சி அப்டேட் கேட்டது இணையத்தில் வைரலாகியது.

இதனிடையே ஆகஸ்ட் 15-ந் தேதிக்கு மேல் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேலும் தாமதமாகும் என அஜித்குமார் தரப்பில் இருந்து லைகாவுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. இதனால் இனியும் பொறுமை காத்து அஜீத்குமார் கூறும்போது படத்தை தொடங்க லைகா விரும்பவில்லை அதனால் விடாமுயற்சியில் இருந்து விலகும் முடிவுக்கு லைகாவந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இப்படம் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸிற்கு விற்கப்பட்டு முன் தொகை வாங்கப்பட்டுள்ளது.

 ஓடிடி தளத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்ற சுயமரியாதையைவிட்டுக் கொடுத்து அஜீத்குமார் வருகிறபோது படத்தை தொடங்குவதா என இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு
 திண்டாடி வருகிறதாம் லைகா நிறுவனம்.