பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் (Bamboo Trees Cinemas & Almuriat) இணைந்து தயாரிக்கும் புரொடக்க்ஷன் எண் 2 திரைப்படத்தின் தொடக்க விழாவுடன் திருவள்ளூரில் படப்பிடிப்பு தொடங்கியது.
‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜகுமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த புரொடக்க்ஷன் எண் 2 திரைப்படத்தினை இயக்குநர் மன்னவராஜன் இயக்குகிறார். இப்படத்தில்
லெனின் பாலாஜி ஒளிப்பதிவாளராகவும், நாகராஜன் படத்தொகுப்பாளராகவும், இணைந்திருக்கிறார்கள்.
அரஜுன் என்கிற புதுமுக நடிகரை இத்திரைப்படத்தின் மூலம் பாம்பூ ட்ரீஸ் நிறுவனர் தயாரிப்பாளர் ரத்தன் லிங்கா அறிமுகம் செய்கிறார்.கதாநாயகியாக செம்பி படத்தில் நடித்த முல்லை நடிக்கிறார்.இயக்குநர் மன்னவராஜன் இயக்கும் இத்திரைப்படம் நம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு மருத்துவ இனத்தை பற்றிப் பேசுகிறது.