சூர்யாவுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதியபடம் சூர்யா 40 என்று அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
சூர்யா இல்லாமல் தொடங்கப்பட்டது இப்படத்தின் படப்பிடிப்பு. முதல்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டவர் நடிகர் வினய்.படத்தில் வில்லனாக அவர்தான் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய தேதிகளை ஒட்டியே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாம்.
சுமார் ஒருவாரம் மட்டுமே முதல்கட்டப் படப்பிடிப்பு இருக்குமென்றும் அதன்பின் சூர்யாவை வைத்து மார்ச் முதல்வாரத்தில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.