ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கும் ஷங்கர்

தமிழ் சினிமாவில் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்க தெலுங்கு நடிகரான ராம்சரணை தமிழுக்கு அழைத்து வருகிறார் ஷங்கர்.

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பேசப்பட்டு வந்தவர் ஷங்கர். ஆனால், ‘பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்குப் பிறகு அந்தப் பெயர் இயக்குனர் ராஜமௌலி வசமானது

தமிழைத் தவிர இதுவரையில் இந்தியில் மட்டுமே படத்தை இயக்கிய ஷங்கர் முதல் முறையாக இயக்கப் போகும் இந்தத் தெலுங்குப் படத்தை தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.

இந்தப் படம் மூலம் ராம் சரண் தமிழுக்கும் வர உள்ளார். ஏற்கெனவே, இப்படி தமிழுக்கு வரும் ஆசையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் ‘ஸ்பைடர்’ படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு தோல்விதான் கிடைத்தது.

ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க உள்ளார். இவர்தான் முதலில் ‘இந்தியன் 2’ படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து அவர்விலகிவிட்டார்.அதன்பிறகு

லைகா நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது.
இந்தியன்-2 படம் எப்போது முடிவடைந்து வெளியாகும் என்பதற்கான எந்தவொரு முடிவும் தெரியாத நெருக்கடியில் ஷங்கர் இருந்தார் அதேநேரம் இவரது இயக்கத்தில் படம் தயாரிக்க தமிழகத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்கள் யாரும் தயாராக இல்லை இதன் விளைவாக தெலுங்கு படத்தை இயக்க வேண்டிய நிலைக்கு ஷங்கர் தள்ளப்பட்டுள்ளார் இந்த புதிய பட அறிவிப்பு திரையுலகில் அதிர்வலைகளை, விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.