அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்க வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24 அன்று வெளிவந்த படம் ‘வலிமை’. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் நிறைவான வசூலை எட்ட முடியவில்லை இந்த நிலையில் முன்னணி நடிகர் நடித்துள்ள ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த வலிமை பிப்ரவரி 24 அன்று ரீலீஸ் அறிவிப்பு வெளியான பின்பு திரையரங்குகள் மத்தியில் நம்பிக்கை ஒளிவீசியது ரசிகர்கள் மட்டுமல்ல வெகுஜன பார்வையாளர்களும் தியேட்டருக்கு வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்வலிமைபடம் பற்றி இரு வேறான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது முதல் நாள் இரண்டாவது காட்சியிலே பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது வலிமையான வசூல் இல்லாமல் வலிமை தடுமாறியது இதனால் வாங்கிய விலையில் 50% மூலதன நஷ்டம் ஏற்படும் என்கிற விவாதங்கள் எழுந்தன ஆனால் இரண்டாம் நாள் முதல் நாள் வசூல் செய்த தொகையில் இருந்து 50% மாக குறைந்தது மூன்றாம் நாள் சனிக்கிழமை பார்வையாளர் எண்ணிக்கை கூடி வலிமை விநியோகஸ்தர்களுக்கு நம்பிக்கையளித்தது நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் வசூல் தொகையில் சுமார் 70% டிக்கட் விற்பனை மூலம் கிடைத்துள்ளது இன்றைய காலை காட்சி சுமாராக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் வசூல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விஜய் நடித்த சர்க்கார் படத்தின் முதல்நாள் வசூலை முறியடித்தது மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூலை வலிமை படம் எட்டிப் பிடித்தது என சமூக வலைத்தளங்களும், இணையதளங்களிலும் செய்திகள் வெளியானாலும் அதனை வலிமை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி அறிவிக்கவில்லை காரணம் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் சாதனையை நிகழ்த்த வலிமை திரையரங்குகளில் போராட்டத்தை நடத்தி வருகிறது என்பதே யதார்த்தமான உண்மையாகும். தமிழ்நாட்டில் வலிமை பிப்ரவரி 24 அன்று சிறப்புக்காட்சி, ரசிகர்மன்ற காட்சி, அதிகபட்ச டிக்கட் கட்டணம் மூலம் வசூல் செய்த தொகை 27 கோடி இரண்டாம் நாள் 12.50 கோடி, மூன்றாம் நாள் 23 கோடி, நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை 25 கோடி என நான்கு நாட்களில் 87.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது 100 கோடி ரூபாய் வசூல சாதனையை நிகழ்த்த இன்னும் சில நாட்கள் காத்திருக்கவேண்டும் வலிமை படக்குழு