ரஞ்சித்தின்குதிரைவால் படம் எப்போது வெளியாகிறது

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம்  பரியேறும் பெருமாள், குண்டுஆகிய படங்களை தயாரித்து வெளியிட்ட இந் நிறுவனம்  தொடர்ந்து படங்களை தயாரித்துவருகிறது.நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டீல் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குதிரை வால்’ என்கிற படத்தை நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யாழி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்  விக்னேஷ் சுந்தரேசன் இந்தப் படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர்களான மனோஜ் லியோனல் ஜாசன்  – ஷ்யாம் சுந்தர்  ஆகிய இரட்டையர்கள்இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் கதை எழுதியுள்ளார் படத்தை பற்றி இயக்குனர்கள் கூறுகிறபோது.
இந்தக் ‘குதிரை வால்’ படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியிருக்கிறது.உளவியல், ஆள் மன கற்பனைகள், மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப் படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும்,  மேஜிக்கல் ரியலிச சினிமாவாக இந்தக் ‘குதிரை வால்’ படம் இருக்கும்.இது போன்ற படங்கள் தமிழில் மிகக் குறைவு. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல; இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக  படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்விதமாகவும் இப்படத்தைஉருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வரும் மார்ச் 4-ம் தேதி இந்தக் ‘குதிரை வால்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தை வெளியிடும் ‘நீலம் புரொடெக்சன்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.