சன் தொலைக்காட்சியும் – துக்ளக் தர்பார் படமும்

விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் துக்ளக் தர்பார்.டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தபடத்தைதமிழ் சினிமாவில் முன்ணனி தயாரிப்பாளரான லலித்குமார்தயாரித்துள்ளார்.

இந்த வருட தொடக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி தந்த மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் இவர் என்பதும், தற்போது விக்ரம், துருவ் விக்ரம் நடித்து வரும்படங்களை தயாரித்து வருகிறார்
துக்ளக் தர்பார்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என நீண்டகாலமாகதகவல்கள்கசிந்து
வருகிறதுஅப்பேதெல்லாம்இத்தகவலைதயாரிப்புத்தரப்பில்உடனடியாக
மறுத்துவிடுவார்கள்

கொரானாஇரண்டாம் பரவல் காரணமாகதிரையரங்குகளை மீண்டும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை அதனால் தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களைOTT நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளை தயாரிப்பாளர்கள்மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தமிழ்சினிமாவுக்கு எந்தளவுக்கு நன்மைகளை வழங்கபோகிறது என்கிற எதிர்பார்ப்பு திரை துறையினர் மத்தியில்ஏற்பட்டுள்ளதுஅதேவேளையில்தயாராகிவெளியீட்டுக்குகாத்திருக்கும் சிலபடங்களுக்குநெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளதுஅவற்றில் விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படமும் உள்ளதுஇப்படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதுஅப்போது, இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லி ஒப்பந்தம் போட்டார்களாம்.
இப்போது திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவெடுத்திருப்பதால் ஒப்பந்தப்படி சன்தொலைக்காட்சியிடம்தடையில்லாசான்று பெறவேண்டும்.
திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காலங்களில் கூட தமிழ் சினிமாவில்சன் தொலைக்காட்சி விரும்பியது நடக்கும் அதற்கான கட்டமைப்புகளை சன் நிர்வாகம் தமிழ் திரையுலகில் உருவாக்கி அதனை தொடர்ந்துபராமரித்துபாதுகாத்து
வந்தது தற்போதைய அரசியல் ஆட்சிமாற்றம் சன்தொலைக்காட்சியை மேலும்வலிமைப்படுத்தியுள்ளது
ஆளும் திமுக தலைமை முந்தைய காலங்களை போன்று சன் நிர்வாக ஆதிக்கத்தை அனுமதிக்கபோகிறதா அல்லது நியாயமாக நடந்துகொள்ளபோகிறதா என்பதற்கான தெளிவு கிடைக்க சில மாதங்கள் ஆகலாம்
இதன் காரணமாக சன் தொலைக்காட்சிக்கு புதிய படங்களின் ஒளிபரப்பு உரிமையை விற்பனை செய்த தயாரிப்பாளார்கள் அவர்களுடன் கராறான போக்கை மேற்கொள்ள முடியாது அவர்கள் கூறுகிறபடி கேட்டு நடக்க வேண்டிய சூழல் உள்ளது “துக்ளக் தர்பார்” படத்தின் தயாரிப்பாளருக்கும் இதுதான் நிலைமை இதுவரைOTTக்கு படத்தை வியாபாரம் செய்வதற்கான கீரின் சிக்னலுக்காக தயாரிப்பு தரப்பு காத்திருப்பதால் துக்ளக் தர்பார்ஒளிபரப்பு தாமதமாகிறது என்கிறது தமிழ் சினிமா வணிக வட்டாரங்கள்