கொரோனா நிவாரண நிதி வழங்கிய சூர்யா, அஜீத்குமார், உதயநிதி

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப்பயன்படுத்தப்படும்.
மேலும், மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பொது மக்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்கள் இயன்ற நன்கொடையை வழங்கிவருகின்றனர்
இந்நிலையில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் நேரில் முதல்வரிடம் தலைமை செயலகத்தில் வழங்கினார்கள்
நேற்றையதினம்13.05.2021 அன்று இயக்குனர் முருகதாஸ், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இருவரும்தலா 25 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளனர் இன்று காலை நடிகர் அஜீத்குமார் 25 லட்ச ரூபாய், நடிகர் ரஜினிகாந்த்1 கோடி ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர் ஏற்கனவே தமிழ் பட இயக்குனா அமுதவன் முதல் நபராக முதல்வர் நிவாரண நிதிக்கு ஐம்பது ஆயிரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது