சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் படம் மார்ச் 10-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.இதையொட்டி நேற்று ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் படக் குழுவினருடன் நடிகர் ராணா, அகண்டா பட இயக்குநரான போயப்பட்டி ஸ்ரீனு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இந்த விழாவில் நடிகர் ராணா பேசும்போது, பத்து வருடங்களுக்கு முன்பாக நான் நடித்த ஒரு படத்தை எடிட்டிங் ரூமிலேயே சூர்யா பார்த்தார். பின்பு அது பற்றி எந்தக் கருத்தையும் சொல்லாமல் என்னைக் காரில் ஏற்றிக் கொண்டு இதே ஹைதராபாத் வீதிகளில் நான்கு மணி நேரம் விடாமல் சுற்றினார்.
அப்போது மெதுவாக என்னிடம், உண்மையா இந்தப் படத்தில் நீ நடிக்கவே இல்லை.. வெறுமனே சமாளித்திருக்கிறாய்… என்று ஓப்பனாகவே சொன்னார். கூடவே அந்த 4 மணி நேரமும் அவர் எனக்கு எடுத்த பாடம்தான் என்னை ‘பாகுபலி’யின் பல்லால தேவா மற்றும் பீம்லா நாயக்’கில் டேனியல் சேகர் உள்ளிட்ட கதாபாத்திரங்களை செய்யுமாறு மெருகேற்றியது.. என்று கூறினார்