தமிழில் பைவ் ஸ்டார், சினேகா அறிமுகமானவிரும்புகிறேன், திருட்டுப்பயலே கந்தசாமி படங்களை இயக்கியவர் சுசி.கணேசன்.
கந்தசாமி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்திப்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார்ஆனால் அங்கு பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. மீண்டும் தமிழுக்கு.திரும்பி, திருட்டுபயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்.
இந்த படத்திற்கு ‘தில் ஹே கிரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் அர்த்தம், இதயத்தின் நிறம் சாம்பல். இந்த உலகத்தில் வெள்ளை மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். கறுப்பு மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்
அப்படி ஒரு கிரே இதயம் படைத்த மனிதர்களின் கதையை சொல்லும் படம் என்பதால் இந்த தலைப்பு என்று தலைப்புக்கு விளக்கம் சொல்கிறார் இயக்குநர் சுசிகணேசன்
இதில் நாயகனாக வினித் குமார் சிங் நடிக்கிறார். நாயகியாக ஊர்வசி ரவுட்லா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அக்க்ஷய் ஒப்ராய் நடிக்கிறார். நாயகியின் அம்மாவாக சீதா நடிக்கிறார்.