தமிழ்பேச தயாரான திகிரேட்இந்தியன் கிச்சன்

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுதுதமிழில்உருவாகிறதுஆர்.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார்.பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும். மற்ற நட்சத்திர தேர்வு நடைப் பெற்று வருகிறது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. தமிழ் – தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. மேலும் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் , இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.அதனைத் தொடர்ந்து ஆர். கண்ணன் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழுக்கு கொண்டு வருகிறார்.இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்கேஆர்பி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.