தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியும்போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், பொருளாளர் பதவிக்கு J.S.K.சதீஷ், துணை தலைவர் பதவிக்கு கதிரேசன், சிங்காரவடிவேலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இராமசாமி@முரளி அணி தீவிரமாக ஓட்டுவேட்டையாடி வந்தனர் T.ராஜேந்தர் அணி மந்தமாகவே இருந்த நிலையில் தீபாவளிக்கு முதல்நாளில் இருந்து வாக்களர்களுக்கு பலசரக்கு மளிகை, அரிசி என பரிசு பொருட்களை வழங்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது

இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் யார் தோல்வி அடையவேண்டும் என்பதை கேபிள் TV மூலம் வியாபார லாபம் பெறும் பெண்மணி தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக இரண்டு அணிகளிலும்தான் தீர்மானத்திருக்கும் வேட்பாளர்களை கறுப்பு ஆடுகளாக மாற்ற முயற்சித்து வெற்றிபெற்றுவிட்டதாக கூறப்படுகிறது
இதற்காக அவர் கையாண்ட யுக்தி பணம், சாதிமுக மூடி என்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில் இதன் நதி மூலம் ரிஷிமூலம் தேடி புறப்பட்டபோதுதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கும் பெயர் ” ஜெசிகா “. கேபிள் டிவி மூலம் ஒரு சங்கம் வசூலிக்க வேண்டிய தொகையை தன்னுடைய சாமர்த்தியத்தால் ” நிழல் சங்கம் ” போல தன் நிறுவனம் மூலம் வசூலித்து வருகிறார் என சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் ஆதாரங்களோடு பொதுவெளியில் குற்றசாட்டை வெளியிட்டு அது பெரும் விவாத பொருளாக மாறியது அந்த சிங்காரவேலன் தற்போது அதே பிரச்சினைகளை கூறி துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்தன்னுடைய தொழிலுக்கு புதிய நிர்வாகிகள் மூலம் குடைச்சல் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் விரும்பும் வேட்பாளர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காகவும், சிங்காரவடிவேலணை தோற்கடிக்கவும் மறைமுகமாக ஜெசிகா தேர்தல் வேலைகள் செய்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளதாக சிங்காரவேலன் வட்டாரத்தில் புலம்பல் கேட்கிறது

தேனாண்டாள் முரளி எந்த விசயத்திற்கும் பெரிதாக ரியாக்ட் செய்யமாட்டார் என்பதால் அவரை தலைவர் பதவிக்கும், மன்னன் மற்றும் KJR ஆகியோரை செயலாளர் பதவிக்கும் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு மறைமுகமாக தன் ஆட்கள் மூலம்வேலை செய்து வருகிறார் ஜெசிகா என்கின்றனர
தன்னுடைய நிறுவனத்தை பற்றியும், தன்னை பற்றியும் ஊர் உலகுக்கு தெரியப்படுத்திய சிங்காரவடிவேலன் வெற்றிபெற்றால் தன் தொழிலுக்கு ஆபத்து என்பதாலும், எதற்கும் ஆசைப்படாத R.ராதாகிருஷ்ணன் செயலாளர் பதவிக்கு வெற்றிபெற்றால் நியாயம் பேசுவார் என்பதால் இவர்கள் இருவரையும் தோற்கடித்தே தீரவேண்டும் என்பதற்காக தனதுநண்பர்களும் நலன் விரும்பிகளுமான கதிரேசனும், R.K.சுரேஷும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இருவருக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் தொகையை கொடுத்து, வாக்காளர்களை கவனிக்க உதவியுள்ளார் என கூறப்படுகிறது
அதனால்தான் எந்த தேர்தலிலும் வாக்காளர்களுக்கு அன்பளிப்பு கொடுக்காத கதிரேசன் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டுவிட்டு கொடுக்க வேண்டியதை தவறாமல் கொடுத்துவருகிறார் என்கிறது தேர்தல் வட்டார கழுகுகள்
தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளராக போட்டியிட்டாலும்R.K.சுரேஷ் மன்னன், கதிரேசன் இருவருக்கும் சேர்த்தே தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்களை சந்திக்கும்போது கொடுக்க வேண்டியதை கொடுத்து வாக்கு கேட்டு வருவதாக கூறப்படுகிறது
அரசியலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை பெருமுதலாளிகள் தங்கள் பணபலம் மூலம் தீர்மானிக்கின்றனர் அதற்கு தேவைப்படும் இடங்களில் சாதி, மதத்தை பயன்படுத்துவார்கள் அதுபோன்ற சூழல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நிர்வாகிகளுக்கான தேர்தலில் முதன்முறையாக ராதாகிருஷ்ணன், சிங்காரவடிவேலன் ஆகிய நியாய கலககாரர்களுக்கு எதிராக பயன்படுத்துவது கவலைக்குரியது ஆரோக்கியமற்றது என்கின்றனர் மூத்த தயாரிப்பாளர்கள்