தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் கதிரேசனைகரை சேர்த்த கரன்சி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 22 அன்று நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தேர்தலில் தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கான போட்டி கடுமையாகவும் போட்டி மிகுந்ததாகவும் இருந்தது இரண்டு துணை தலைவர் பதவிக்கு ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்டனர் அணியின் சார்பில் போட்டியிட்டவர்களை காட்டிலும் சுயேச்சையாக போட்டியிட்ட கதிரேசன், சிங்காரவடிவேலன் இருவரும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியிலும் இணைந்து போட்டியிடாமல் தனித்து நின்று வெற்றிபெற்றவர் கதிரேசன் கடந்த காலங்களில் செயலாளராக பதவி வகித்த இவர் சங்க நலனுக்காக, உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டது இல்லை என்கிற குற்றசாட்டு ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலிக்கும் இந்த தேர்தலில் அது அதிகமாகவே இருந்தது
எல்லோரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி 493வாக்குகள் பெற்றுதுணை தலைவராக கதிரேசன் வெற்றியடைய காரணம் கரன்சியும் அதனை எந்த இடைதரகரும் இல்லாமல் வாக்காளர்களுக்கு கொண்டு சேர்த்ததுமே காரணம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த 1303 வாக்காளர்களில் 500 பேரை நேரடியாக கதிரேசன் சந்திக்கவில்லை அதேநேரம் தொலைபேசி தொடர்புகள் மூலம் நல் உறவு கொண்டிருந்தார் என்கின்றனர் வாக்காளர்களை சென்டிமெண்டாக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் அவர்களது வங்கி கணக்கில் தீபாவளி அன்பு தொகை செலுத்தப்பட்டதை தெரிவித்திருக்கிறார் அதுவே அவரது வெற்றியை உறுதியாக்கி இருக்கிறது என்கின்றனர்
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிக்காக தங்களது கடந்தகால பணிகளை கூறி வாக்கு கேட்டதை காட்டிலும் கரன்சியின் கருணையில் வாக்குகளை பெறவே முயற்சித்தனர் வேட்பாளர்கள் என்கிறார்கள் அன்பளிப்பளிப்புகளை மறுத்து தங்கள் வாக்குகளை செலுத்திய தயாரிப்பாளர்கள்
பலம்மிக்க இரண்டு அணிகள் களத்தில் இருந்தாலும் தனித்துகளம் கண்ட கதிரேசனை கரன்சிகரையேற்றி துணை தலைவராக்கியிருக்கிறது அதற்காக அவர் செலவு செய்த தொகை ஐம்பது லட்ச ரூபாய் என கூறப்படுகிறது பணம் கொடுத்து வாக்குவாங்குவது எல்லோராலும் இயலாத காரியம் என்பதற்கு இதே அளவு பணத்தை செலவு செய்து வெற்றிவாய்ப்பை இழந்த துணை தலைவர் வேட்பாளர் சிங்காரவடிவேலனை உடனிருந்து குழிபறித்தவர்கள் பற்றி அடுத்த கட்டுரையில்

துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்குகள் விபரம்

S.கதிரேசன் – 493

R.K.சுரேஷ் – 419

P.T.செல்வகுமார் – 305

சிவசக்திபாண்டியன் – 277

R.சிங்காரவேலன் – 193

K.முருகன் – 110

V.மதியழகன் – 50