விஜய் நடிக்க போகும் படத்தின் தொலைக்காட்சி உரிமை 50 கோடி

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைவது பெருமையாக இருப்பதாக தில் ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்னும் படப்பிடிப்பு கூடத் தொடங்கப்படாத இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .தமிழ், தெலுங்கு மொழிகளிகளில் தயாராகும் தளபதி66 படத்திற்குஅத்தொலைக்காட்சி 50 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது

இன்னும் தொடங்கப்படாத படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கு இவ்வளவு பெரிய தொகை பேசப்பட்டிருப்பது தமிழ், தெலுங்கு சினிமா வியாபார வட்டாரத்தில்  வியப்பை ஏற்படுத்தியுள்ளது.