தாமதமாகும் ராஜவம்சம் வெளியீட்டு தேதி

சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள ராஜவம்சம் படத்தின் வெளீயீடு தள்ளிப்போயிருக்கிறது.செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை கதிர்வேலு இயக்கியுள்ளார்.

இதில் சசிகுமாருடன் நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, ‘கும்கி’ அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர் .

இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேதியில் வெளியாகவில்லை அதோடு ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது அந்தத் தேதியிலிருந்தும் படம் தள்ளிப்போயிருக்கிறது.இப்படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று இப்போது சொல்லப்படுகிறது.