சினிமா ரசிகர்களால், திரைப்பட துறைசார்ந்தவர்களால் உயர்ந்த கௌரவமாக கருதப்படும் 93வதுஆஸ்கர் விருது ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்பட்டதுஎப்போதும் வியாபார முக்கியத்துவமுள்ள ஆண்கள் அதிக அளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் 93வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அதிகளவு பெண்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர் அதேபோன்று விருது வென்றவர்கள் பட்டியலிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்கோல்டன் குளோப் விருதை வென்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “நோமேட்லேண்ட்” சிறந்த திரைப்படம், இயக்கம், நடிப்பு என பல பிரிவுககளில் விருதை பெற காரணமாக இருந்த இப்படத்தின் இயக்குனர் க்ளோயிஸாவ் பெண் என்பதுடன் ஆஸ்கர் விருதை பெறும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் படத்தின் கதையும் வேலை இழந்த ஒரு பெண் பற்றிய கதையாகும்நோமேட்லேண்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ள ஃபிரான்சிஸ் மெக்டார் மண்ட் மூன்றாவது முறையாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெறுகிறார்தென் கொரிய நாட்டை சேர்ந்த73வயதுநிரம்பிய,தொலைக்கா ட்சி நடிகையான “யூ ஜங் யூன்” மினாரி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குணசித்திர துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெறும் முதல் கொரிய நாட்டை சேர்ந்தவராவார்
Related Posts
இங்கிலாந்தை சேர்ந்த 35 வயதான இயக்குனரும், நடிகையுமான எமரால்ட் ஃபென்னெல், ப்ராமிஸிங் யங் வுமன் என்கிற படத்தின்நேரடி திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்நெட்ஃப்ளிக்சின் தயாரிப்பான” மை ஆக்டோபஸ் டீச்சர்” சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை வென்றுள்ளது இந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவரான பிப்பா எக்ஹ்லிச்ம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது