இணையத்தில் வெளியாகும் விருமாண்டி

கமல்ஹாசன் நடித்து 2004 ஜனவரியில் திரைக்கு வந்த படம் விருமாண்டி. இதில் நாயகியாக அபிராமி மற்றும் பசுபதி, நெப்போலியன் ஆகியோரும் நடித்து இருந்தனர். படத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்து எதிர்ப்பு காரணமாக விருமாண்டி என்று மாற்றினர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. படத்தின் கதை தொடர்பாக விமர்சனங்களும் கிளம்பின. தென்கொரியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருமாண்டி திரையிடப்பட்டு சிறந்த ஆசிய படத்துக்கான விருதையும் பெற்றது. தெலுங்கிலும் விருமாண்டி படம் போதுராஜூ என்ற பெயரில் வெளியானது. 17 வருடங்களுக்கு பிறகு விருமாண்டி படம் வருகிற 14-ந்தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர். இது கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதையொட்டி படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டு உள்ளனர்.