சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து பின்னர் சென்னை திரும்பினார்.
சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அங்கு சில நாட்கள் அவர் தங்கி இருந்துவிட்டு சென்னை வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைபெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் பிரத்யேக 27.10.2021ஆம் தேதி ரஜினிகாந்துக்காக சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தை குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சென்று பார்த்தார். இந்தநிலையில், நேற்று இரவுதிடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு ‘தாதா சாஹேப் பால்கே’ விருதை அறிவித்திருந்தது கடந்த 25ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விருதை வழங்கி கவுரவித்தார்.அதன்பின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார். டில்லி பயணத்தை முடித்து 26.10.2021 அன்று நள்ளிரவு சென்னை திரும்பினார்
இந்நிலையில், 28.10.2021 இரவு 8:30 மணி அளவில், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.’முழு உடல் பரிசோதனைக்காக, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார்’ என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.