டாணாக்காரன் சொல்லும் கதை என்ன?

0
229

தமிழ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாணாக்காரன்’. இப்படத்தின் டீசரை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். தற்போது யு டியுப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இந்த டீசர் இருக்கிறது- டீசருக்கு 3 லட்சம் பார்வைகள்தான் இதுவரை கிடைத்திருக்கிறது என்றாலும் படத்தின் கதைக்களம் வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளதாக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

போலீஸ் வேலையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவலர் பயிற்சிப் பள்ளியில் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படும். அப்படிப்பட்ட பயிற்சிப் பள்ளியைத்தான் இந்தப் படத்தில் களமாக வைத்திருக்கிறார்கள். போலீஸ் வேலையில் இருந்து விலகி வந்த தமிழ் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

காவலர் பயிற்சிப் பள்ளியில் அதிகாரியாக இருக்கும் லால் எவ்வளவு கடுமையாக பயிற்சிகளை அளிக்கிறார். அவரது பயிற்சியில் உள்ள கொடுமைகள், அரசியல் என்ன என்பதும் டீசரில் இருக்கிறது. “அடிமைத்தனமும, அடக்குமுறையும் இங்க இருக்கு. அதை எதிர்த்து கேள்வி வரதான் செய்யும்,” என விக்ரம் பிரபு பேசும் வசனமே இது எந்த மாதிரியான படமாக இருக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது.

‘இதுவரைக்கும் ஈஸ்வரமூர்த்தி ஐயா கையால 18 பேர் செத்திருக்கான்”, “ஈஸ்வரமூர்த்தி முத்துப்பாண்டி யாரை போலீஸ்னு முடிவு பண்றாங்களோ அவங்கதான் இங்க போலீஸ்,” ஆகிய வசனங்கள் படத்தின் கருத்தியல் எது என்பதை புரிய வைக்கின்றன.

டீசருக்கான ஜிப்ரானின் பின்னணி இசையும் மிரட்டலாக அமைந்துள்ளது. விக்ரம் பிரபுவிற்கு இப்படம் திருப்புமுனையான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“மாயா, மாநகரம், மான்ஸ்டர்’ படங்களைத் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here