விஜய் நடிக்கும் பிகில் படம், தீபாவளியையொட்டி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இப்படம் தணிக்கைக்குழுவினரால் பார்க்கப்பட்டுU/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது
இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.
இன்னும் 500 ஷாட்ஸ்களுக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்யவேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் மட்டும் வேலை செய்தால் அது முடியாது என்பதால் இந்தியா முழுக்க உள்ள கிராஃபிக்ஸ் நிறுவனங்களில் அந்த வேலைகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது
இதனால் படக்குழுவினர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பறந்து சென்று வந்து கொண்டிருக்கிறார்களாம்.
இதனால் செலவு அதிகமாகிறது என்றாலும் குறித்த நேரத்துக்குள் வேலை முடிய வேண்டும் என்கிற பரபரப்புடன் ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.