ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக புதிய படம் பூஜையுடன் சென்னையில் 20.08.2025 ஆம் தேதிதுவங்கியது.
அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக இது அமையவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Related Posts
‘கே ஜி எஃப்’ படத்தில் தனது இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.