டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் படங்களை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் தயாராகி வரும்படம் மாஸ்க்
கர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு ‘மாஸ்க்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இதனை வெற்றிமாறன் தயாரிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நான்கு போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, அதில் ஒன்றில் கவின் மாஸ்க் உடன் நிற்பது போலவும், இன்னொன்றில் ஆண்ட்ரியா துப்பாக்கியுடன் வில்லத்தனமாக சிரிப்பது போலவும் இடம்பெற்றுள்ளது.
ஒரு போஸ்டரில் கவின் – ஆண்ட்ரியா இருவரும் நேருக்குநேர் முறைத்தபடி நிற்கின்றனர். இந்த போஸ்டர்கள் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இப்படத்தினை ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் இணைந்து தயாரிப்பது தெரிகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை வழங்குகிறார். ‘மாஸ்க்’ மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார் ஆண்ட்ரியா.
‘மாஸ்க்’ படத்தில் கவின், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழங்க அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்குகிறார். “