இசை நிறுவனத்தை தொடங்கும் தயாரிப்பு நிறுவனம்

அஸ்வினி தத்தால் 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர்  தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தற்போது  ‘கல்கி 2898 கி.பி.’ என்ற படத்தைதயாரித்து வருகிறது. திரைப்பட தயாரிப்பில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்நிறுவனம். அதனை கொண்டாடும் வகையில்புதிதாக ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
50 ஆண்டுகள் நிறைவடையொட்டி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2024 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு.இலட்சிய படைப்பின் வெளியீட்டிற்கு முன்னதாக அவர்கள் இந்த வைஜெயந்தி மியூசிக் எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும் ‘எங்கள் இசையை உங்கள் வாழ்வில் கொண்டு வருவோம்’ என்பதுதான் வைஜெயந்தி மியூசிக் எனும் மியூசிக் பிராண்டின் நோக்கம்  என இந்நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.‌