காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் 5 பாடல்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.
‘விடாமுயற்சி’ படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. அப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை வெளியிடலாம் என்று அந்த படத்தை தயாரித்துள்ள ரெட் ஜெயன்ட் நிறுவனம் முடிவெடுத்துஅதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டப்பட்டுள்ளது.
Next Post