பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
“பேய் இருக்கோ.. பிசாசு இருக்கோ.. இதெல்லாம் அதோட வேலைதானா..?” என்று நம்மை உசுப்பிவிட்டு கிளைமாக்ஸில் எவனோ ஒருவனை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி ஏமாற்றும் வகையான படங்களில் இதுவும் ஒன்று.
ஒரு கிராமத்தில் செவ்வாய்கிழமை தோறும் யார் வீட்டு சுவற்றிலாவது இன்னாருக்கு இன்னார் மனைவியுடன் கள்ளத் தொடர்பு என்று எழுதப்பட்டிருக்கிறது. அன்றைய தினமே அந்தக் கள்ளக் காதலர்கள் இறந்து போகிறார்கள்.
ஊருக்கு புதிதாக வந்திருக்கும் பெண் சப்-இன்ஸ்பெக்டரான நந்திதா ஸ்வேதா இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்க நினைக்கிறார். ஆனால் ஊர் ஜமீன்தார் அதற்கு வழி விட மறுக்கிறார்.
முதல் செவ்வாய்கிழமை மரணங்களை தற்கொலை என்று மூடினாலும், அடுத்த செவ்வாய்கிழமை நடந்த மரணங்களின் விசாரணையை ஜமீன்தாரால் தடுக்க முடியவில்லை.போஸ்ட்மார்ட்டம்
ஊர்க்காரர்கள் அனைவரும் அந்த 3-வது செவ்வாய்க்கிழமையன்று ராத்திரி ரோந்துப் பணியில் ஈடுபட்டு சுவரில் கள்ளக்காதல் கதை எழுதுபவனை பிடிக்க முயல்கிறார்கள்.
அது முடிந்ததா..? நடந்த கொலைகளுக்கு என்ன காரணம்..? இதன் பின்னணியில் இருப்பது யார்..? என்ற சஸ்பென்ஸான கேள்விகளுக்கு விடைதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
படத்தின் ஹைலைட்டே நாயகி பாயல் ராஜ்புத்தின் தைரியமான நடிப்புதான். வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
காதல் காட்சிகளில் ரொமான்ஸை அள்ளி வீசியும், நெருக்கமான காட்சிகளில் சூடேற்றியும், உணர்வுகளைத் தூண்டும் காட்சியில் சிருங்காரத்தோடும், அடக்க முடியாத உணர்வை அடக்க தவிக்கும் பெண்ணாகவும், தன் மன நிலையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து.. அந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அல்லல்படும் பெண்ணாக கடைசியாக ஒரு பரிதாப உணர்வை நம்மிடமிருந்து வரவழைத்துவிட்டார். அஜ்மலுடனான காதல் காட்சிகளில் காட்டியிருக்கும் நெருக்கம் தியேட்டரை சூடாக்குகிறது.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் தெலுங்கி திரையுலக அழகியான திவ்யா பிள்ளையும் தன் பங்குக்கு சேலையிலேயே தன் உடல் அழகையும், சிரிப்புடன் கூடிய
சப்-இன்ஸ்பெக்டராக நந்திதா.. தெனாவெட்டான உடல் மொழியிலும், ஸ்டைலான நடை, உடை, பாவனையிலும் வித்தியாசமான நந்திதாவைப் பார்க்க முடிகிறது.காதல் என்ற பெயரில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் காதலனாக அஜ்மல் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். சொத்தையெல்லாம் ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு செத்துப் போனதால் தனது அப்பா மீது கோபத்தில் இருக்கும் ஜமீன்தாரும் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார்.
பால்ய காலத்து காதலனாக சில காட்சிகளே வந்தாலும் ரவி கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நெகிழ வைக்கிறார். நல்ல மனிதராக, மருத்துவராக நடித்திருப்பவரும் தன் பங்குக்கு அழுத்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
படத்திலேயே வீணான கதாப்பாத்திரம் என்றால் அது அஜய்கோஷ்தான். கண் தெரியாத நபருக்காவது திரைக்கதையில் முக்கிய இடம் உண்டு. ஆனால் அஜய் கோஷூக்கு அதுவும் இல்லை. இவர் பேசும் சில வசனங்களும், இடம் பெறும் காட்சிகளும் படத்தின் சீரியஸ் தன்மையைக் குலைக்கின்றன.
போதுமான அளவுக்கு ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். சோளக் காட்டுக்குள், இரவு நேரத்தில் நடக்கும் சண்டையையும், துரத்தல் காட்சிகளையும் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். வித்தியாசமான சண்டை காட்சிகள்கூட ரசனையாக படமாக்கப்பட்டுள்ளன.
படத்திலிருக்கும் இரண்டு பாடல்கள் காட்சிகளும் தரமானவை. டப்பிங் படங்கள் என்பதால் பாடலுக்கும், வசனத்திற்கும் வாயசைப்பு ஒத்துப் போகவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பின்னணி இசையில் மட்டும் திரில்லிங்கைக் கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்.
படத்தில் பாராட்டக் கூடிய விஷயம் இதுவரையிலும் எந்தப் படத்திலும் சொல்லாத ஒரு விஷயமாக ‘அதீத செக்ஸ் உணர்வு கொண்ட பெண்’ என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். இதை எந்தவொரு நாயகியும் ஏற்கவே மாட்டார்கள். துணிந்து நடித்திருக்கும் பாயலுக்கு நமது பாராட்டுக்கள்.அதேபோல் இடைவேளைக்குப் பின்பு படத்தை மிக வேகத்தில் கொண்டு போகும் அளவுக்கு திரைக்கதையை அமைத்தும், சஸ்பென்ஸை கடைசிவரையிலும் கொண்டு சென்று திடுக் திருப்பமாக நம்மை ஷாக்கடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்சஸ்பென்ஸ், திரில்லர் டைப்பில் படம் பார்க்க நினைப்பவர்கள் தாராளமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்..!