தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நயன்தாராவுடன், யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலரும் நடிக்கின்றனர்,