நாயகனாக நடித்திருக்கும் மெட்ரோ சத்யா, ஏற்றுக் கொண்ட எதிர்மறை வேடத்துக்கு மிகப் பொருத்தமாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர், பெரும்பான்மை தாய்களின் பிரதிநிதியாக இயல்பாக நடித்து கலங்க வைக்கிறார்.
ஜெயப்பிரகாஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகக் கொடுரமானது.அதை பார்வையாளர்கள் உணரும்படி நடித்திருக்கிறார்.டேனிபோப்,
என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் சென்னை நகரம் புதிதாகத் தெரிகிறது.செய்திகளில் பார்க்கும் கண்காணிப்புக் கருவிகளின் காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் வழிப்பறிக் காட்சிகளைப் பதிவு செய்து பதறவைத்திருக்கிறார்.
ஜோகன் சிவனேஷ் இசையில் அந்தோணிதாசன் இடம்பெறும் பாடல் சிறப்பு.பின்னணி இசையில் பதட்டத்துக்குப் பதட்டம் கூட்டியிருக்கிறார்.
கதை திரைக்கதை எழுதியிருக்கும் ஆனந்த கிருஷ்ணன், நாம் எவ்வளவு ஆபத்தான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறார்.ஒருவனின் தன்னலம் மற்றும் தன்சுகம் ஆகியன சமுதாயத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதைப் புறவகையிலும் சாதாரண இளைஞன் சிறிதும் மனிதாபிமான இல்லாத கொடூரமானவனாக எப்படி மாறுகிறான்? என்கிற அக மாற்றத்தையும் அழகாக எழுதியிருக்கிறார்.
இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, எடுத்துக் கொண்ட கதைக்கு நியாயமாக உழைத்து நேர்த்தியான படத்தைக் கொடுத்திருக்கிறார்.