இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, சென்னையில்படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.
இதில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,
ஆண்பாவம் என்ற வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் எங்களுக்குத் தெரிந்தது. அந்த வார்த்தையே ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இந்தக்குழு பொல்லாததைச் சேர்த்து, ஆண் பாவம் பொல்லாதது எனப் படமெடுத்துள்ளார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர் விஜயன், இந்தப்படம் உங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் ஆனால் கடைசியில் அழ வைத்துவிடும் எனச் சொன்னார். ஒரு தயாரிப்பாளர் இந்த அளவு, ஒரு இயக்குநரை நம்புவது ஆச்சரியம். படக்குழுவினர் அதற்கான உழைப்பைத் தந்துள்ளனர். டைட்டில் டிசைனே மிக அழகாக உள்ளது, அதற்காக உழைத்துள்ளார்கள். படம் கண்டிப்பாக நன்றாக இருக்குமெனத் தெரிகிறது. டிரெய்லர் பார்த்தேன் மாளவிகாவை பார்க்கப் பக்கத்து வீட்டுப் பெண் போல அவ்வளவு பந்தமாக இருக்கிறார். வாழ்த்துக்கள். ரியோ ராஜ் இனி ரியோ என வைத்துக்கொள்ளலாம் அழகாக உள்ளது. லியோ மாதிரி ரியோ அழகாக உள்ளது. ரியோவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தப்படக்குழு வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.
நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது..,
இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசியதாவது..,
“