இந்தப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.அக்டோ
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற இரண்டுக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டனர்.
அவர்கள் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்கிக்கொள்வதாகவும் அதற்கான விலையாக சுமார் முப்பது கோடி நிர்ணயம் செய்தார்கள். சுமார் 80 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் ஆனால் 30 கோடி ரூபாய் முதலீட்டு தொகை திரும்ப கிடைக்கும். வணிகமாகபார்த்தால் இது நல்ல விலை,
ஆனால்,தனுஷ் தரப்போ,எம்ஜி அடிப்படையில் கேட்டவர்களுக்கு கொடுக்காமல் விநியோக அடிப்படையில் ஏஜி எஸ் நிறுவனத்துடன்படத்தின் வியாபாரத்தை முடித்திருக்கிறார்கள். கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஆலோசனையில் நடைபெற்ற வியாபாரம்…
தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலான திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றவர்களும்,வளைகுடா நாடுகளுக்கு மட்டும் விநியோக அடிப்படையில்தான் படத்தைக் கொடுப்போம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
அதற்குக் காரணம்,படத்தில் மம்முட்டி நடித்திருப்பதால் வளைகுடா நாடுகளில் கூடுதல் வசூல் செய்யும் எனவே எம்ஜி அடிப்படையில் கொடுக்காமல் விநியோக அடிப்படையில் கொடுத்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று முடிவுசெய்து கொடுத்திருக்கிறார்களாம்.
படத்தின் மீதான நம்பிக்கையில் இந்த வியாபாரங்கள் நடந்திருக்கின்றன.