கலாட்டாவான’ஏழுகடல் ஏழுமலை’ முன்னோட்டம்

 

வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள  ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராம் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவும், விஎஸ் மதி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
‘ஏழு மலை ஏழு கடல்’ ட்ரெய்லர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த ட்ரெய்லர் 1.50 நிமிடங்கள் ஓடுகின்றன. ரயிலில் பயணம் செய்யும் சூரி தான் சந்தித்த ஒரு விசித்திரமான மனிதரைப் பற்றித் தன் நண்பனிடம் சொல்வதில் தொடங்குகிறது ட்ரெய்லர்.

அவர் சந்தித்த விசித்திரமான நபர் நிவின்பாலி. 8,000 வருடங்களாக வாழும் சாகாவரம் பெற்றவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

இவர்கள் சந்திப்பால் நிகழும் குழப்பங்களும், நிவின் பாலியின் கடந்த காலமுமாய் நீள்கிறது ட்ரெய்லர். அதில் ஓர் எலிக்கும் இடம் இருக்கிறது. அந்தக் கடந்த காலத்தில் தேவதையாக வருகிறார் அஞ்சலி.

நிவின் பாலியின் தோற்றமும், சில காட்சிகளும் ‘கற்றது தமிழ்’ படத்தை நினைவூட்டுகின்றன. என்றாலும் ராம் காட்டவுள்ள அந்த புதிய உலகம் பற்றிய எதிர்பார்ப்பை சூரி + நிவின் பாலி கலாட்டா ஏற்படுத்துகிறது.
இந்தப் படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.