கல்வியை மைய திரைக்கதையாக கொண்ட’நடு நாடு’ முன்னோட்டம்

சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட்  இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு
 இத்திரைப்படத்தின் அறிமுக நாயகர்கள் எழில் மற்றும்  அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ  நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு
 இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது
 கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள்  முடிந்து விட்டது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.