வேரூஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
“நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் .சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் இயக்குநராக
பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெயரிடப்படாத திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்க்ஷன் கிரைம் த்ரில்லர் ஆக உருவாகவிருக்கிறது. இதில் கவுதம் ராம் கார்த்திக். போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறியதாவது
“நாங்கள் வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கிய முக்கிய நோக்கம் — நம்முடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கொண்டு தரமான கற்பனைதிறன் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதே. படங்கள், டிஜிட்டல் மற்றும் இசை துறைகளில் நாங்கள் முன்னதாகவே வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், குறிப்பாக அண்மையில் வெளியான நம்முடைய ‘We Call Him Dhoni’ பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. இயக்குநர் சூரியபிரதாப் இந்த கதையை விவரிக்கும்போது, அவர் உணர்வுகளை நேரடியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனை உணர்ந்தோம்.
இதற்கு முன் வேரூஸ் புரொடக்ஷன்ஸ், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்ற “பேச்சி” எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இணைந்து தயாரித்திருந்தோம் என்றனர்.