‘டாக்ஸிக்’ இந்திய சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு செல்லும் முயற்சி- யாஷ்
கன்னடம், ஆங்கில மொழிகளில்
கேவிஎன் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா, மான்ஸ்டர் மைண்ட் புரொடக் ஷன்ஸ் சார்பில் யஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. கன்னட நடிகர்சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் நடிகர் யஷ் பேசியதாவது
இத்தனை சிறந்த நடிகர்கள் ஒன்றாகச் சேரும்போது சில சங்கடங்கள் வரலாம். ஆனால் இதில் தங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்திய சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இணைந்ததால் தான் இந்தப் படம் சாத்தியமானது.
இந்தப் படத்தை உருவாக்குவது மிகவும் கடினமான ஒன்று. இது ஒரு வித்தியாசமான முயற்சி. மிகவும் சவாலானது, இது ஒரு வணிக ரீதியான படம் அல்ல.
வாழ்க்கையில் ஒன்றைச் செய்ய விரும்பும்போது, எதுவும் உங்களைத் தடுக்கக்கூடாது என்று நம்புகிறேன். நம்மில் பலர், மோசமாகப் பேசுபவர்களையும், ‘உங்களால் இதைச் செய்ய முடியாது’ என்று சொல்பவர்களையும் பார்க்கிறோம். ஆனால், நான் அப்படி சொல்வதைக் கேட்பதில்லை.