இதற்கிடையே நகரத்தில் மர்மக்கொலைகள் நடக்கின்றன.அதை ஒரு சைக்கோ செய்வதாகச் சொல்லப்படுகிறது.
நாயகனாக நடித்திருக்கும் டிராவிட்செல்வம்,ஆட்டம் பாட்டம் என கதாபாத்திரத்திற்குத் தேவையான அனைத்தையும் நன்றாகச் செய்திருக்கிறார்.இந்தக்கதையை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லவேண்டும் என்கிற இயக்குநரின் எண்ணத்தைச் செயலாக்க டிராவிட்செல்வம் பொருத்தமாக இருக்கிறார்.
தேவதையாக நடித்திருக்கும் சித்தி இத்னானி,தேவதையாகவே தோன்றுகிறார்.அஞ்சலிநாயர்,தீபக் உள்ளிட்டோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜெயந்த் சேதுமாதவனுக்கு குறுகிய களம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கு
ஹரிஇசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு செய்திருக்கும் சதீஷ் சூர்யா,படத்தை வேகமாக்க முயன்றிருக்கிறார்.
இந்தக்கதைக்குப் பலம் சேர்க்க காட்சிகளில் நிறைய புதுவிதமான பொருட்களை வடிவமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் கலை இயக்குநர் ஆர்.கிஷோர்.
பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத்,இந்தப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.மோகினி,தேவதை,