தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் கன்னட நடிகை அத்விதி ஷெட்டி

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவாபேஸ் ஒன் – தி அரைவல்’
அறிமுக இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குகிறார்.
ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது .
கதையின் நாயகியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ,  சென்ராயன், யூட்யூப் பிரபலம் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் கதாநாயகியான அத்விதி ஷெட்டி கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவர். பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ளார்.
‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும்போது,
 “இதில் “வல்லபி. ராணுவ அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன.. இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது.
எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டதாகவும் என் லிப்-சிங்க் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டினார்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நான் கிளிசரின் பயன்படுத்தாமல் நடித்ததை கண்டு மொத்த படக்குழுவிடமிருந்தும் கைதட்டல் கிடைத்தது.. பொதுவாகவே அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.
இயக்குனர் மிலோவின் சினிமா பார்வை மிகவும் வித்தியாசமானது. பார்வையாளர்களுக்கு புதுமையான அறிவியல் புனைகதை திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். “நோவா” அதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.