தியாகராஜன் இயக்கத்தில் அறிமுகமாகும் தேவயானி மகள்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்நடிகைகள் அதிகரித்து வருகின்றனர். இன்றைய தமிழ்சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள கதாநாயகன்கள்  வாரிசு நடிகர்களே.

நடிகர், இயக்குநர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட தியாகராஜன் முழுநேர இயக்குநராக மாறியுள்ளார். தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியான’ கோர்ட்’ படம் தமிழில் தியாகராஜன் இயக்கத்தில் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை தேவயானி மகள் பிரியங்கா, தயாரிப்பாளரும், இயக்கு னருமான கதிரேசன் மகன் ஹரி, இவர்களுடன் பிரசாந்த் நடிக்கிறார்
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்கே சுரேஷ், மைம் கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழில் ரஜ்ஜன் என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு நிகழ்வு நடிகர் பிரசாந்த் பிறந்தநாளான ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.