பாரிஸ் கஃபே இசை வெளியீட்டு விழா

தண்டர் மீடியா கண்மணி ரங்க நாதன், மற்றும் எல்.விஎன்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்  மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர்  நடித்துள்ளனர். சராஜ் சீலன்  இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நிகழ்வில் நடிகர் குரு சோமசுந்தரம்  பேசும்போது,
இந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடிச்சு நான் ஒத்துக்கிட்டேன் இந்த  படத்தில் இயக்குனரின் மனைவி வேலைக்கு போவாங்க ஆனா இந்த படத்தோட இயக்குனரின் மனைவி இந்த படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட்  படம். அனுமோல் வேற ஒருத்தவங்கள அழகா இருக்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க அது அன்பான சண்டை. இந்த படத்துடைய எடிட்டருக்கு அவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கே என்னுடைய நன்றி. முக்கியமா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார் ரொம்ப கஷ்டமான ரோல் அத ரொம்ப நல்லா பண்ணி இவருக்கு  வாழ்த்துக்கள். கௌசல்யா அவர்கள் வந்ததுக்கு நன்றி பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது , கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்கூடாது நம்ம மாறினால்தான் எல்லாமே மாறும் இந்த படம் அதைப்பற்றி தான் பேசும் என்றார்.
  படத்தின் இயக்குனர் சராஜ் சீலன் பேசும்போது,
என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது, என்னுடைய அப்பா தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார், வாரம் தவறாமல் படங்களை பார்ப்போம், படிச்ச ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றிதான் அதிகமா பேசுவோம் சினிமாலாம் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா பாலச்சந்தர் பாலுமகேந்திரா பாக்கியராஜ் இவங்க தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்கள். நான் பாக்யராஜ் சார்-ஐ இந்த படத்துக்கு  கூப்பிடனும்னு நினைச்சா அவரு இப்ப இல்ல அது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க அப்பாக்கு கலைத்துறையில் ரொம்ப ஆர்வம் அவரும் மூலமா தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்து தான் கத்துக்கிட்டேன். ஒரு நிமிட ஷார்ட் பிலிம் என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன் அந்தப்படம் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதா மாறியது அதற்குப் பிறகு எல்லாமே சினிமா தான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம் கிட்ட முதல் முறை கதை சொன்னதும் அவர் ரொம்ப நல்லா இருக்கு நானே பண்றேன் என்று சொல்லிட்டார் அவர் கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு . அனுமோல் கிட்ட போன்ல தான் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்து ஒத்துக்கிட்டாங்க. படத்துல நடிச்ச நடிகர் நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி.
நடிகர்கள்:
குரு சோமசுந்தரம்,
அனுமோல்,
அர்ச்சனா குமார்,
விஜய் விஷ்வா,
சாய் விக்கி,
நயனா சாய்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம் – சராஜ் சீலன்
ஒளிப்பதிவு – சதீஷ் ஜி.
இசை – கே. கிருஷ்ணகுமார்
படத்தொகுப்பு – வி.ஜே. சபு ஜோசப்
கலை இயக்கம் – தாமு
பாடல்கள் – விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன்