ராதிகா உருமாறிய”தாய் கிழவி” முன்னோடம் எப்படி?

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ராதிகா இடம்பெற்றபடத்தின் முதல் பார்வையே பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு சீமை, பசும்பொன் படங்களுக்கு பின் ராதிகா நடித்திருக்கும்” தாய்கிழவி” திரைப்படத்தில் தென்மாவட்டங்களில் பரவலாக இப்போதும் இருக்கும் குடும்ப மூத்த பெண்மணியின் முதிர்வேடத்தில் நடித்திருக்கிறார். கதை முழுக்க அவரை சார்ந்தே இருக்கும் என்பதை படத்தின் சுவரொட்டிகள் கூறுகின்றன. அந்தப் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகியுள்ளது.
முன்னோட்டம்எப்படி?

 ஒரு தாய்க்கும் அவரது மகன்களுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினையே படத்தின் கதைக்களம் என்பதை முன்னோட்டம் மூலம் யூகிக்க முடிகிறது.

எனினும் ராதிகாவின் கதாபாத்திரம் குறித்து முன்னோட்டத்தில் பெரிதாக காட்டவில்லை. சிங்கம்புலி, முனீஸ்காந்த், பாலசரவணனின் காமெடிகள் படத்தில் நன்றாக கைகொடுக்கும் என்பது முன்னோட்டம் மூலம் தெரிகிறது. இறுதியில் எல்லா கட்சிப் பெயர்களையும் சொல்லும் காட்சி வைரல் ரகம். படம் வரும் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.