இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.
‘பத்தா’படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு பெரும் வரவேற்பு, விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்ததால் முதல் நாளில் இருந்து வணிக ரீதியாக வசூல் அதிகரிக்க தொடங்கியது. இப்படம் நான்கு நாட்களில் 13 கோடி ரூபாய்வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையொட்டி சென்னையில் நேற்று காலை செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்து படத்தின் வெற்றி செய்தியை அறிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி,
நான்தான் நாயகன் என அழைத்துச் சென்றுவிட்டு சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு வில்லனாக மாற்றிவிட்டார்கள். குழந்தை நட்சத்திரமாக அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறான். அவனுக்குக் கிடைக்கிற புகழ் அவனின் படிப்பைக் கெடுத்துவிடக்கூடாது. நன்றாக படிக்கவும் வேண்டும். நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிப்பைப் பார்த்தபோது என் அம்மாவைப் பார்ப்பது மாதிரி இருந்தது. காரணம், என் அப்பாவை அடக்க முடியாது. அப்படியான கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து அசத்திவிட்டார். சாய் அபயங்கர் தன் வயதிற்கு மீறிய புரிதலில் இருக்கிறார். கண்டிப்பாக, ஒரு லெஜெண்ட் ஆக வரக்கூடிய ஆள். அவருக்கு என் வாழ்த்துகள் ” என்றார்.