2020 தமிழ் சினிமா – சிறப்பு பார்வை

தமிழ் சினிமா கடந்த 100 வருடங்களில் சந்திக்காத சிக்கலை எதிர்கொண்டது இயற்கை உலக சமூகத்துக்கு வில்லனாக கொரானா உருவில் மனிதர்களின் அன்றாட இயக்கத்தை முடக்கிப் போட்டது விவசாயத்தை தவிர அனைத்து உற்பத்தி கேந்திரங்களையும் முடக்கிப் போட்டதில் சினிமாவும் தப்பிக்கவில்லை இந்த வருடம் மார்ச் 13 க்குப் பின் எந்த தமிழ் படமும் ரீலீஸ் செய்ய முடியவில்லை திரையரங்குகள் மூடப்பட்டன
படத்தயாரிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டன மீண்டும் 14.11.2020 அன்று தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்ய அரசு அனுமதி வழங்கியது நட்சத்திர நடிகர்களின் படங்களை ரீலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள் அதனால் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட புதுமுக நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே வெளியானது பார்வையாளர்கள் வருகை மோசமாக இருந்ததால் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களை உரிமையாளர்கள் இன்றுவரை மூடி வைத்துள்ளனர்
ஜனவரி முதல் மார்ச் 13 வரை 48 திரைப்படங்களும், நவம்பர் 14 முதல் டிசம்பர் 27 வரை 37 நேரடி தமிழ் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன இந்த படங்களில் பாக்ஸ்ஆபீஸ் வசூலில்
1. தர்பார்(ரஜினிகாந்த்)
2. பட்டாஸ்(தனுஷ்)
3. சைக்கோ(மிஷ்கின் -உதயநிதி) ஆகிய படங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

அடுத்த ஐந்து இடங்களில்
1. கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால்
2.ஓமை கடவுளே
3. நான் சிரித்தால்
4.மாபியா
5.திரெளபதி இடம்பிடித்துள்ளன மற்ற படங்கள் அனைத்தும் முதலுக்கே மோசம் செய்த படங்களாகும்.