வீட்டிற்கு அருகே இருக்கும் அருவி பாலா உள்ளிட்ட இளைஞர்கள் எப்பொழுதும் யோகி பாபுவை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் இவருடைய மேஜிக் ஷோவை ரசிக்கும் சாந்தி ராவ், யோகி பாபுவிடம் அன்பாக நடந்து கொள்கிறார். பின்பு அது காதலாக மாறுகிறது.
யோகி பாபுவை கதையின் நாயகனாக நடிக்க வைத்து, வித்தியாசமான கேரக்டர் கொடுத்து, ரசிகர்களை ஜோராக கை தட்ட வைப்பார் என நம்பி படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார் மலையாள இயக்குனரான வினீஷ் மில்லினியம்.
கதாநாயகி சாந்தி ராவ் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. படத்தில் யாருடைய கேரக்டரும் மனதில் நிற்கவில்லை.
இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மது அம்பட் ஒளிப்பதிவு உருப்படியாக உள்ளது. அருணகிரி இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஜித்தின் ரோஷனின் பின்னணி இசையும் சுமார் ரகம்.
படத்திற்கு பெரிய பலம் என்றால் யோகி பாபு மற்றும் அவருடைய நடிப்பு அதோடு கேரள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இடங்கள் ரசிக்கும் படியாக உள்ளன.