ராவ் பகதூர்- திரைப்பட விமர்சனம்

ராமப்பா ராவ் பஹதூர் அரச குடும்பம். அந்த குடும்பத்தில் ராமப்பா ராவ் பஹதூருக்கு விடை தெரியா கேள்வி ஒன்று அவரை வாழவும் விடாமல் நிம்மதியாக சாகவும் விடாமல் அலைக் கழிக்கிறது. இதனை மையமாக கொண்டு திரைக்கதை எழுதப்பட்டு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ள படம் ராவ்பகதூர்.
ராமப்பாவுக்கு மனைவி இருந்தாலும் அவருடன் பல ஆண்டுகளாக பேசாமல் அரண்மனையின் வேறு ஒரு அறையில் தங்கி வாழ்ந்து வருகிறார்..
ஒருநாள் ராவ் பஹதூர் உடல்நிலை மோசமடைந்து படுத்த படுக்கையாகிறார்..

அரச குடும்பத்து வாரிசுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும் அவரது நண்பரும் மருத்துவருமான ஆச்சாரி அரண்மனைக்கு வருகிறார்..

அப்போது மரணப் படுக்கையில் இருக்கும் போது இதனால் வரை காத்து கிடந்த ஒரு ரகசியத்தை மருத்துவரிடம் சொல்கிறார் ராவ் பஹதூர்.. அந்த சந்தேகம் தீர்ந்தால் நான் நிம்மதியாக கண்ணை மூடி மரணம் அடைந்து விடுவேன் என்கிறார்.

ராமப்பா ராவ் பஹதூராகவே சத்யதேவ் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னாலும் அது மிகையல்ல.. காரணம் உடல் மொழியிலும் கண் அசைவில் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..
இளமை முதுமை என இரண்டு தோற்றத்திலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகனுக்கு இணையான ஒரு கேரக்டரில்ஆச்சாரியாக வருகிறார் விகாஸ் முப்பாலா

தீபா பிளேஷ்பேக்கில் வந்தாலும் நம்மை நடிப்பால் ஈர்த்து விடுகிறார்..

அச்சம்மாவாக பாலா பரசர்.. காமெடியில் கலக்கி இருக்கிறார்

இவர்களுடன் ஐபிஎஸ் அதிகாரியாக ஆனந்தும் தன் பங்குக்கு நடிப்பில் கலக்கி இருக்கிறார்..

சமரன் சாயின் இசையமைக்க கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. 1960 காலகட்டங்களை ரசிகர்கள் கண் முன் நிறுத்த இவர்கள் பட்ட சிரமங்களை காட்சிகள் வெளிப்படுத்துகிறது.

கலை இயக்குநர் ரோஹன் சிங்அரண்மனை இப்படி இருந்திருக்குமோ என்று வியக்க வைக்கிறார்..

இயக்குனரான வெங்கடேஷ் மஹா படத்தொகுப்பாளராகவும் பணி செய்திருக்கிறார். எனவே காட்சிகள் தடுமாற்றமின்றி நகர்கிறது.

அரசர் குடும்பத்து கதை என்றாலும் அதை சீரியஸாக காட்டாமல், நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் இயக்குனர்..

வழக்கமான தெலுங்கு மசாலா படத்திலிருந்து ஒரு மாறுபட்ட பீரியட் டிராமா படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ் மஹா..