நாயகியாக நடித்திருக்கும் மதுமிதாதாஸ் வங்காளப் பெண் வேடமேற்றிருக்கிறார்.அதனால் வங்காளம் ஆங்கிலம் தமிழ் என பலமொழிகளில் பேசுகிறார்.எந்த மொழித்தடையும் இல்லாத மெல்லிய உணர்வுகளை நடிப்பில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும்ரெஜின்ரோஸ்,ஆலம்
ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோர் இசையில் கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி ஆகியோரின் எழுத்தில் வந்திருக்கும் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம்.ஜோயி ரிடாவின் பின்னணி இசை படத்துக்கு பலம்சேர்த்திருக்கிறது.
சமுதாயத்தின் பொதுபுத்திக்கு எதிரான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்துவிடவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.அதேநேரம் பொதுப்புத்தியில் பாலியல் தொழிலாளிகளை அணுகும்போக்கும் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணமாகாத ஒருவர் திருமணம் செய்வதா? எனும் கேள்வியையும் சிக்கலுக்குரிய மையக்காரணம் என்று வைத்திருக்கிறார்.இதனால் இவ்விரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு திரைக்கதை தத்தளிக்கிறது.
முத்தத்தை நிபந்தனையாக வைத்திருப்பது மூலப்படமெடுத்த உலகத்தில் சாதாரணமாக இருக்கலாம்,இங்கே வேறு எதையாவது நிபந்தனையாக வைத்திருந்திருக்கலாம்.திரைக்