துல்கர்சல்மான்,இந்தப்படத்திலு
நாயகியாக நடித்திருக்கிறார் கயாடுலோகர்.மருத்துவராக நடித்திருக்கிறார்.அவர் மருத்துவராக இருந்தால் எல்லோரும் நோயாளியாக இருக்க விரும்புவார்கள் எனுமளவுக்கு அவருடைய பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது.
ஆண்டனிவர்கீஸ் கதாபாத்திரமும் அது துல்கர் கதாபாத்திரத்தோடு இரண்டறக் கலந்து பயணப்படுவதும் சுவாரசியமாக இருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின்.மாவீரன் படத்தில் பார்த்ததுபோல்வே இந்தப்படத்திலும் அவருடைய பாத்திரப்படைப்பும் நடிப்பும் இருக்கிறது.
கதிர்,சம்யுக்தா விஸ்வநாதன்,வினய் ஆகியோருடைய கதாபாத்திரங்களும் திரைக்கதைக்குத் தேவையான அளவில் இருக்கின்றன.
ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் பல்வேறு உணர்வுகளுக்கேற்ற ஒளியமைப்பை வைத்திருக்கிறார்.துல்கரின் பல்வேறு உணர்வுகளையும் காட்சிகளில் மெருகேற்றியிருக்கிறார்.கயாடு லோகர் வரும் காட்சிகள் இனிமையாக இருக்கின்றன.
ஜேக்ஸ்பிஜாயின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரம் போலவே கதை சொல்ல உதவியிருக்கிறது.
சாமன் சாக்கோ படத்தைத் தொகுத்திருக்கிறார்.திரைக்கதையி
திரைக்கதை எழுதியிருக்கிற சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் ஆகிய மூவரும் ஏதேதோ யோசித்து செயல்பட்டிருக்கிறார்கள்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் நஹாஸ் ஹிதாயத்.வழக்கமாக ஒரு ஆள் இன்னொரு ஆளைப் பழிவாங்கத் துடிப்பார் என்பதற்கு மாறாக ஒரு கை அந்த வேலையைச் செய்கிறது என்று மாற்றி யோசித்து ஒரு சுவையான மையக்கதையை எழுதியிருக்கிறார்.அதை திரைக்கதையாக்கிய வகையில் பலவீனம் இருந்தாலும் துல்கர் காப்பாற்றுகிறார்.