இப்படத்துக்கு ஒளிப்பதிவு மணிகண்டன்.பிகே,படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம்,இசை சக்தி பாலாஜி.இந்தப்படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தன.
சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ இரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறுமுதலீட்டுப் படத்தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரியநம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பினைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வெற்றி மகிழ்ச்சியை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில்’எங்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்ற பதாகையுடன் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்கள்.இந்தச் சந்திப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே,தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால்,இசையமைப்பாளர் சக்தி பாலாஜி,நடிப்புக்கலைஞர்கள் வேல ராமமூர்த்தி,ஜெயக்குமார்,ஆர்த்
செப்டம்பர் 22 அன்று சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் கலந்து கொண்டு பேசும்போது….
முதலில் இந்தப்படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துகள்.இந்தப்படம் வெளியாவதற்கு ஆறுமாதத்திற்கு முன்பு நான் பார்த்தேன்.பார்த்தவுடன் இயக்குநர் பாலாஜியிடம் படம் நல்ல த்ரில்லராக வந்திருக்கிறது.சரியான தேதியில் வெளியிட்டால் படத்திற்கு நல்லவரவேற்பு கிடைக்கும் என்று கூறினேன்.இந்தக் தேதியைக் குறிப்பிட்டபோது நான் பாலாஜியிடம் கேட்டேன் ”இந்தத் தேதி சரியானதுதானா?அன்றைக்கு ஒன்பது படங்கள் வருகின்றன.ஏற்கெனவே ‘மண்டாடி’ நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்றேன்.அப்போது அவர்”இல்லை சார் இந்தத்தேதியை முடிவு செய்துவிட்டோம் அதற்குக் கொண்டு வருகிறோம்” என்றார்.ஒன்பது படங்களுக்கு மத்தியில் இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.அதற்கு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவும்தான் காரணம்.எனது வாழ்த்துகள்.இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்.இத்தனை படங்கள் நடுவில் மக்கள் பெரியபடங்களைத்தான் பார்ப்போம்.பெரிய நட்சத்திர நடிகர் நடித்த படங்களைத்தான் பார்ப்போம் என்றிருக்கிற சூழலில் இந்தப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பது கொண்டாடப்பட வேண்டிய வெற்றிதான்.ஒரு திரைப்படம் எடுக்கும்போது ஒரு நடிகர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினைகளை அந்தப்படம் சந்திக்குமோ அத்தனையையும் இந்தப்படம் சந்தித்திருக்கிறது.அதுவும் அறுபது,எழுபது சதவீதம் படப்பிடிப்பு முடிந்தபிறகு அந்த நடிகருடன் தொடர்ந்து போகமுடியவில்லை என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து நிறுத்திவிடுவோம் என்று முடிவு எடுப்பது யாரும் சுலபமாக எடுக்கமுடியாது.சிலவருடங்களுக்
இயக்குநர் பாலாஜி பேசும்போது….
இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம்.இப்போதும் அந்த அறுபது -எழுபது சதவீத படத்தை எடுத்துவிட்டுத் தூக்கிப்போட்டது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.இந்தப்படம் வருவதற்கு இந்தத் தயாரிப்பாளர்கள் இருவர் முக்கியமானவர்கள். சகோதரர் ஷரண்,கோபால் சார் இவர்கள் முக்கியமானவர்கள்.அதையும்தாண்டி என் மனைவி,என் சகோதரர்,குடும்பத்தினர்,நண்பர்