திரை இசை கலைஞர்களின் புதிய முயற்ச்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமான தமிழ் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் சென்னையில் உள்ளதனக்கு சொந்தமான இடத்தில் பத்துமாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றை அமைக்க உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் நலிந்த தனது சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை அமுல்படுத்த உள்ளது.
இதற்காக மாயாபஜார் ஹப்  என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான  ஒப்பந்தத்தை திரை இசை கலைஞர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது.
மாயா பஜார் நிறுவனம்
தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான  இடத்தில்  மாபெரும்  வணிக வளாகம் அமைத்து, அதில்
 திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க உள்ளது.
பத்து மாடி கட்டிடத்தை கட்ட தேவையான நிதியை திரட்ட திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம்  சார்பில்  இசை நிகழ்ச்சிகள் சென்னை, ஹைதராபாத், குஜராத், சிங்கப்பூர் மற்றும் துபாய் நகரங்களில் நடத்தவுள்ளனர்.
 இந்தத் திட்டத்திற்கு அனைத்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் சங்கத்திற்காக இலவசமாக இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி தர முன்வந்துள்ளனர்.
இம்மாபெரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதனை 28.09.2026 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழ் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் அறிவித்தது.